பெரும் பித்தன் யாரென பேய்க் காளி அறிவாள்

பேரழகி யாரெனில் பேய்க் காளி; பெரும் பித்தன் சிவனோ, நானோ? என் இடக் கரம் ஏந்திய அவனது பித்தக் கபாலமும் சிந்தித்துக்கொண்டிருக்கிறது இதையே தலைப் பிரட்டைகள் நீந்தித் திரியும் எனது மஞ்சள் மூளையும் அதே ரூபம் கொண்ட இந்திரிய அணுக்கள் துள்ளிக் களிக்கும் அவனது மூளையும் ஏறக் குறைய ஓரே சாயலிலானவை பேரண்டப் பாழ்வெளி மிதக்கும் சூன்யக் கபாலத்துக்குள் நிராலம்ப சமாதி1யில் ஆழ்ந்திருக்கும் அவனது பிறழ்மூளை இன்னமும் ஆதி உயிர்ப்புடன், அதீத இச்சையுடன் தன்னைத் தானே சிதை மூட்டிக்கொண்டு உயிர்த்தெழலின் உத்வேகத்தோடு எரியும் சிவ கபாலத்தை நான் ஏந்தியிருக்கிறேன் சோமக் கோப்பையாக பேய்க் காளியின் காதல் பெரும் பித்தமாக நிரம்பி வழிகிறது அடர் மயிர் அலங்கரிக்கும் உறங்கா யோனியின் வற்றாத மதநீராக எரியும் சிவ கபாலக் கோப்பை அதில் முழங்கி ஜோதிர்மயிக்க அகோரிய ஆவேசத்தோடு விசுத்தம்2 வரை முட்டக் குடித்து ஆனந்த வெறித் தாண்டவமாடுகிறேன் சூன்யம் மிதக்கும் பேரண்டப் பாழ்வெளியில் பெரும் பித்தன் யாரென பேய்க் காளி அறிவாள் *** **அடிக் குறிப்புகள் :** 1. **நிராலம்ப சமாதி** : பேதமற்ற சமாதி நிலை 2. **விசுத்தம்** : கழுத்தில் அமைந்துள்ள ஐந்தாவது குண்டலினிச் சக்கரம். சிவனின் நீல கண்டம் இதைக் குறிப்பதே!