ஆக்டோபஸ் நிலவு

குறுங்காவியம்
I குற்றங்கள் நடமாடும் நிழல்களாக இருக்கின்றன நிழலைப் போலப் பின்தொடரவும் செய்கின்றன நடுமாடும் நிழல்களைக் கண்டு நடுங்குகிறவர்கள் அவை எந்த நிழல்களின் பிம்பங்கள் என்பதைக் காணவும் அஞ்சுகிறார்கள் அதனால் அந்த நிஜங்கள் மீது விழும் ஒளியையும் தரிசிக்கத் தவறிவிடுகிறார்கள் நிஜங்கள் நிழல்களாக உள்ள குற்றத்தை விடவும் இது பெருங்குற்றம் எனும் இந்த வரிகளின் மீது விழுகிறது கண் கூசும் தரிசனத்தின் பேரொளி உங்கள் மீது விழுகிறது உங்களுக்குப் பீதியூட்டும் அந்தச் சொற்களின் கரிய நிழல் II கைக்கொன்றாக திசையெட்டையும் வளைத்துக் கபளீகரம் செய்துவிட்டு காட்டேரிகள் குடிகொண்ட கடவுளின் மூளையைக் கடித்துக் குதறி ஆக்டோபஸ் நிலா தெய்யமாடும்1 ஜாமங்களில் மசைபிடித்து நரமிருகனாகிறான் அகச்சிவப்புக் கவிஞன் அப்போதுதான் அவனது கபாலத்தில் தரிசனங்கள் முளைக்கின்றன அவை நிலவில் ஒளிச்சேர்க்கை செய்பவை என்பதறிந்து அவனைச் சுற்றி சோமக்கொடி2யெனப் படர்கிறது நிலவுகளை உண்ணும் கருநாகம் III நிச்சயமாக அது ஒரு நீல நிலாக் காலம் அப்போது நிலவு வளர்முலைப் பருவத்தில் இருந்தது அவனால் காவியமாக்கப்பட வேண்டிய நிலவின் அந்தக் குறுமுலைகளில் காவியகர்த்தாக்களுக்கான உன்மத்தம் ஊறத் தொடங்கியதை சட்டையைத் துருத்தி நிற்கும் காம்புகளின் கசிவிலிருந்து கண்டுகொண்டான் அதைப் பருகிய நாளில் - இடப் பக்கம் மச்சமுள்ள தனது லிங்கத்தின் பீடத்தில் அரும்பிக்கொண்டிருந்தது போலவே நிலவின் தேமல் படர்ந்த அல்குலிலும் அப்போது மென்மயிர் பூக்கத் தொடங்கியிருந்ததை நிலவு மூத்திரம் பெய்யும்போது ( அதன்சாரலில் களி நடமிடும் வானவிற்கள்நடுவேயிருந்து ) கண்டதாகக் கனவு முளைத்தது அதுவரை சிறுநீர் மட்டுமே பெய்துவந்த அவனது குறி வெண்குருதியை உடையில் ஒழுக்கியதும் அதுவரை மூத்திரம் மட்டுமே பெய்துவந்த நிலவின் யோனி ஆடையில் செங்குருதி சிந்தியதும் அன்றுதான் அன்றுதான் ●●● நிலவு ருதுவான நட்சத்ரம் அவனது ஜென்ம நட்சத்ரம் IV பல்பிரதித்துவம் கொண்ட ஒரு கவிதையைப் போல நிலவு அவனுக்குத் தோழியாகவும் காதலியாகவும் சகோதரியாகவும் தாயாகவும் இறைவியாகவும் பூதகியாகவும் இருக்கிறது அதன் முலைப்பாலை அவன் அருந்துகிறான் நிலவின் நெஞ்சகமே அதன் முலைகளில் பாலாகிறது அதன் பல்பிரதித்துவங்களில் தோழியின் முலைப்பாலை அருந்துவதால் தோழமையும் காதலியின் முலைப்பாலை அருந்துவதால் உன்மத்தமும் சகோதரியின் முலைப்பாலை அருந்துவதால் நேயமும் தாயின் முலைப்பாலை அருந்துவதால் விகாசமும் இறைவியின் முலைப்பாலை அருந்துவதால் அமரத்துவமும் பூதகியின் முலைப்பாலை அருந்துவதால் அமானுஷ்யமும் கொண்டுவிடுகிறான் அதனால் பல்பிரதித்துவம் கொண்ட ஒரு கவிஞனாகிவிடுகிறான் V தரிசனங்கள் முளைக்கும் அவனது தலைக்குள் கொதித்துக்கொண்டிருக்கிறது உன்மத்தம் அதில் மல்லாந்து நீந்தித் திளைத்துக்கொண்டிருக்கிறது நிர்வாண நிலவு நிலவீர்ப்புவிசையால் இயங்குகிறான் அகச்சிவப்புக் கவிஞன் நிலவின் மயிரடர்ந்த யோனி துளைத்து கன்னித் திரை கிழியக் குருதி கொட்டிக்கொண்டிருக்கும் நிலவின் யோனிக்குள் அவன் பற்றவைப்பது அணையாப் பெருந் தீ பிறகு தரிசனம் முளைக்கும் அவனது கபாலத்தைப் பிளந்து நிலவு ஊற்றுவதோ உன்மத்தத்தின் கொதி நீரூற்றுகள் கொண்ட திரள் முலைக் கனிகளைப் பிழிந்தெடுத்த அமுத விஷம் VI தரிசனங்கள் முளைக்கும் கடுந்தலையனான உன்மத்தனின் சுவாசத்திலிருந்து வெளியேறும் காற்று மஞ்சள் நிறமானது அதைச் சுவாசிப்பவர்கள் புத்தி பேதலித்துவிடுகிறார்கள் அல்லது மண்டையுடைத்துத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் தலைப்புழு குடைய செந்நாய்கள் ஓலமிடுகின்ற காட்டு நிலாக் காலங்களிலும் தலைச்சன் பிள்ளையின் மண்டையோடு தேடி மலையாள மாந்தரீகர்கள் சவமேடுகளைத் தோண்டும் மூளிநிலா ராத்திரிகளிலும் அவனது கபாலத்தில் மேலதிகமாக தரிசனங்கள் முளைக்கின்றன முழு நிலவில் செந்நாய்கள் காடதிர்கிறபடிக் கதறி ஊளையிடும்போது சூன்ய நிலவில் கருப்பு மாந்தரீகர்கள் குறியறுத்துப் பூஜித்து உருமாறும் ஒடியன்3களை வயப்படுத்திக்கொண்டிருக்கும்போது அவனது மஞ்சள் காற்று விஷச் சூறாவளியாகிறது பிண்டமலைகளையே அப்போது புரட்டிப் போட்டுவிடுகிறது காட்டேரிகள் குடிகொண்ட கடவுளின் மூளையைக் கடித்துக் குதறி ஆக்டோபஸ் நிலா தெய்யமாடும் ஜாமங்களிலோ மசைபிடித்து நரமிருக அவதாரனுமாகிவிடுகிறான் பேருண்மைகளின் தரிசனங்கள் அவனால் அம்மணமாக்கப்படும்போது தத்துவங்கள் மல்லாந்து தொடை விரிக்கின்றன ஒளிவட்டங்களை க்ரஹணிக்கும் சாத்தானிய ஜாமத்தில் கடவுளின் மூளையிலிருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டேரிகளின் யோனி மயிர்க்கூச்சரிய எழுகிறது அகச்சிவப்பு நரமிருகனின் அமானுஷ்ய ஊளை மறுநாள் புலரியில் அறையெங்கும் நிறைந்திருக்கின்றன அவனது தலையிலிருந்து உதிர்ந்த தரிசனங்கள் அவற்றின் நடுவே கிடக்கிறது தரிசனங்களிலிருந்து உதிர்ந்த அவனது கடுந்தலைக் கபாலம் VII அமுதமுறிவான விஷத்தையும் விஷமுறிவான அமுதத்தையும் கபாலத்தில் கொண்டவன் வாழ்வதுமில்லை சாவதுமில்லை அவன் நிஜங்களின் பைசாசமாகிவிடுகிறான் அல்லது நிழல்களின் தேவனாகிவிடுகிறான் பிசாசுகளுக்கோ தேவர்களுக்கோ நிழல் விழுவதில்லை கட்புலனாகாத அரூபனாகி கதிரியக்கம் படர்த்திக்கொண்டிருக்கிறான் அகச்சிவப்புக் கவிஞன் அவனது கபாலத்துக்குள் இருக்கும் ஒளிவட்டம் மஞ்சள் பித்தத்தோடு அடிவானில் சந்த்ரோதயமாவதை நிலாமுற்றத்திலிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள் சட்டையுரித்துப் பளபளத்தபடி அதில் படுத்திருக்கும் கருநாகம் பிளவுண்ட நாக்கை நீட்டியபடி உங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது மேலும் உங்கள் முற்றத்திலேயே நீண்டு விழுந்து கொண்டிருக்கிற உங்கள் நிழலையும் **¤** *** **அடிக் குறிப்புகள் :** 1. **தெய்யம்**: கேரளத்தின் தாந்த்ரீக நடனச் சடங்கு, 2. **சோமக் கொடி**: தேவர்கள் அருந்தும் மது ரகமான சோமபானத்தைத் தயாரிக்கப் பயன்படும் மூலிகை, 3. **ஒடியன்**: குட்டிச் சாத்தான்.