அவதாரம்

சந்த்ரிகா, உன்னைக் குறி வைத்தே பகையறுக்கும் வெஞ்சினமென ஆவேசம் கொண்டு உருக்குச் சொற்களில் கதாயுதம் சுழற்றி ஒவ்வொரு தூண்களாக நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறேன் த்ரிசந்த்யா காலத்துத் தலைவாயிலில் உன் மடியிலெனைக் கிடத்தி கூர் நகத்தாலென் நெஞ்சம் பிளந்து குருதி குடித்தென் மூர்க்கந் தவிர்க்க எந்தத் தூணிலிருந்து வெளிப்படப்போகிறாய்?