நான் ஏன் எதிர் கவிஞனானேன்

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இந்த உலகத்தில் கவிதைக்கு இடமிருக்கிறதா இல்லை என்றால் இக்கணமே வாசிப்பை நிறுத்திவிடுங்கள் இருக்கிறது என்றால் உங்களுக்கு நெஞ்சம் என்ற ஒன்று இல்லை என்பதையாவது ஒத்துக்கொள்ளுங்கள் பால் மணம் மாறாப் பச்சிளம் குழந்தைகளை மாபாதகக் கொடூரம் செய்கிறார்கள் வக்கிரக் காமாந்தகர்கள் இளம் பெண்கள் பதின்வயதுச் சிறுமிகள் முகத்தில் அமிலம் வீசி விகாரப்படுத்துகிறார்கள் ரௌடிகள் மருமகள்கள் எரிவது இன்னும் நிற்கவில்லை மனைவிகள் உருக்குலைவது தீரவில்லை குழந்தைகள் பிச்சையெடுக்கலாமா முதியோர் இல்லங்கள் ஏன் உருவாகின மனநலக் காப்பகங்களுக்குள்ளோ அரசு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்குள்ளோ பார்வையாளராகவேனும் நீங்கள் சென்றிருக்கிறீர்களா பசிக்கொடுமை தாங்காமல் ஒரு முதியவர் தனது மலத்தையே தின்ன நேர்ந்த அவலம் வந்த பின்னுமா இந்த பூமி வெடித்துச் சிதறவில்லை?